1
சொற்பிரிப்பு
உரை
சிவபெருமான், நீண்டு விரிந்த ஒளிக் கதிர்களை உடைய வெண்பிறையையும், வரிசையாகத் தொடுத்த கொன்றை மாலையையும் தன் முடியில் சூடியிருப்பவர். அந்திப் பொழுதில் ஒளியோடு கூடிய எரியை ஏந்திச் சுடுகாட்டில் ஆடுபவர். அழகிய உயர்ந்த சொற்களைப் பேசுபவளும், சிறந்த அணிகலன்களைப் பூண்டுள்ளவளும் ஆகிய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டு பாடுபவர். அத்தகைய பெருமான் எழுந்தருளிய நன்னகரம் திருப்பரங்குன்றம் ஆகும்.