- கோயில் எங்கும் ஒன்றலோ, குளங்கள்நீர்கள் ஒன்றலோ?
- தேயுவாயு ஒன்றலோ, சிவனும்அங்கே ஒன்றலோ?
- ஆயசீவன் எங்குமாய் அமர்ந்துதவாரது ஒன்றலோ?
- காயம்ஈதறிந்த பேர்கள் காட்சியாவர் காணுமே.
- Koyil engum onralo, kulangalniirgal onralo?
- Theeyuvaayu onralo, sivanumangee onralo?
- Aayasiivan engumaay amarndhudhavaaradhu onralo?
- Kaayamiidharindha peergal kaatsiyaavar kaanumee.
உரை
பூமியெங்கும் உள்ள கோயில்கள் அனைத்தும் ஒன்றல்லவா? பல குளங்களில் ஓடும் நீரும் ஒன்றல்லவா? உலகை இயக்கும் அக்னியும் காற்றும் எல்லா இடங்களிலும் ஒன்றல்லவா? அண்ட சராசரங்களிலும் மனித உடல்களிலும் உறையும் சிவனும் ஒருவனே அல்லவா? எல்லா உயிர்களிலும் வியாபித்து நிற்கும் ஆத்ம சைதன்யம் ஒன்றல்லவா? இவ்வாறு அண்டத்திலுள்ள யாவும் பிண்டமாகிய இந்த உடம்பிலேயே (காயத்திலேயே) அடங்கியுள்ள ரகசியத்தை அறிந்த ஞானிகள், எங்கும் சிவதரிசனமாகிய காட்சியாகவே தாமும் மாறி விளங்குவார்கள் என்று சமத்துவ அத்வைதத்தை முழங்குகிறார்.
Temple, tank, light, wind, and Siva are each asked whether they are already one, and the life that searched is asked the same, together with whatever sat and gave help. The questions walk through the places and forces people treat as separate sites. At the end, the people who have known this body become the vision itself, and they are told to look. Knowing the body is the seeing the questions were pressing toward.
The teaching
Sivavakkiyar exposes the absurdity of sectarian boundaries and sacred geography. Is not the cosmic temple essentially One everywhere? Is not water identically the same across all temple tanks, streams, and oceans? Are not fire (தேயு) and wind (வாயு) universal elements operating uniformly across the universe? And is not Shiva—the supreme consciousness—identically One within all? Is not the discerning soul pervasive and identical in all beings? Those enlightened masters who realize the profound truth of this physical body (காயம்) as the true living cosmos transcend all ritualistic divisions; they become the very vision of divine reality (காட்சி), seeing the One in all and all in the One.