விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தாமரைப்பூம்பாதச் சிலம்பு பலஇசை பாடப்பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும்வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்வேழ முகமும் விளங்குசிந் தூரமும்அஞ்சுகரமும் அங்குச பாசமும்நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்நான்ற வாயும் நாலிரு புயமும்மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 10
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞானஅற்புதம் ஈன்ற கற்பகக் களிறேமுப்பழம் நுகரும் மூஷிக வாகனஇப்பொழு தென்னை யாட்கொள வேண்டித்தாயாய் எனக்குத் தானெழுந் தருளிமாயாப் பிறவி மயக்க மறுத்தேதிருந்திய முதல் ஐந்தெழுத்துந் தெளிவாய்ப்பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து 20
குருவடி வாகிக் குவலயந் தன்னில்திருவடி வைத்துத் திறம்இதுபொருள் எனவாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தேஉவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டிஐம்புலன் தன்னை அடக்கு முபாயம்இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்கருவிக ளடுங்குங் கருத்தினை யறிவித்துஇருவினை தன்னை அறுத்திருள் கடிந்து 30
தலமொரு நான்கும் தந்தெனக் கருளிமலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தேஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டிஆறா தாரத்து அங்குச நிலையும்பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தேஇடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டிமூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 40
குண்டலி யதனிற் கூடிய அசபைவிண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்துமூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்காலால் எழுப்புங் கருத்தறி வித்தேஅமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்குமுத சகாயன் குணத்தையுங் கூறிஇடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்சண்முக தூலமுஞ் சதுர்முக சூட்சமும்எண்முகமாக இனிதெனக் கருளிப் 50
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்தெரியெட்டு நிலையும் தெரிசனப்படுத்திக்கருத்தினிற் கபால வாயில் காட்டிஇருத்தி முத்தி இனிதெனக் கருளிஎன்னை அறிவித்து எனக்கருள் செய்துமுன்னை வினையின் முதலைக் களைந்தேவாக்கும் மனமும் இல்லா மனோலயம்தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்துஇருள் வெளியிரண்டிற் கொன்றிட மென்னஅருள் தரும் ஆனந்தத் தழுத்தி என் செவியில் 60
எல்லை இல்லா ஆனந் தமளித்துஅல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டிச்சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டிஅணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க்கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டிவேடமும் நீறும் விளங்க நிறுத்திக்கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டிஅஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னைநெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துத் 70
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்டவித்தக விநாயக விரைகழல் சரணே