மூத்த பிள்ளையார் வழிபாடு ›

திருப்புகழ்

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரிகப்பிய கரிமுக ...... னடிபேணிக்கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவகற்பக மெனவினை ...... கடிதேகும்மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்மற்பொரு திரள்புய ...... மதயானைமத்தள வயிறனை உத்தமி புதல்வனைமட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனேமுத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்முற்பட எழுதிய ...... முதல்வோனேமுப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்அச்சது பொடிசெய்த ...... அதிதீராஅத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்அப்புன மதனிடை ...... இபமாகிஅக்குற மகளுட னச்சிறு முருகனைஅக்கண மணமருள் ...... பெருமாளே. # 1
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடைபட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழியபட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதருசிற்றடியு முற்றியப ...... னிருதோளும்செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடுசெப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனேஇக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெளரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம்மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொருவிக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழிவெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்வித்தகம ருப்புடைய ...... பெருமாளே. # 2
உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகிஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறிஇன்பரசத் தேபருகிப் ...... பலகாலும்என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயேதம்பிதனக் காகவனத் ...... தணைவோனேதந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனேஅன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனேஐந்துகரத் தானைமுகப் ...... பெருமாளே. # 3
நினது திருவடி சத்தி மயில் கொடிநினைவு கருதிடு புத்தி கொடுத்திடநிறைய அமுது செய் முப்பழம் அப்பமு(ம்) நிகழ் பால் தேன்நெடிய வளை முறி இக்கொடு லட்டுகம்நிற வில் அரிசி பருப்பு அவல் எள் பொரிநிகர் இல் இனி கதலி கனி வர்க்கமும் இளநீரும்மனது மகிழ்வொடு தொட்ட கரத்து ஒருமகர சலநிதி வைத்த துதி கரவளரு(ம்) கரி முக ஒற்றை மருப்பனை வலமாகமருவு மலர் புனை தொத்திர சொல் கொடுவளர் கை குழை பிடி தொப்பண(ம்) குட்டொடுவனச பரி புர பொன் பத அர்ச்சனை மறவேனேதெனன தெனதென தெத்தென அன பலசிறிய அறு பதம் மொய்த்து உதிரப் புனல்திரளும் உறு சதை பித்த(ம்) நிணக் குடல் செறி மூளைசெரும உதர நிரப்பு(ம்) செருக் குடல்நிரைய அரவ நிறைத்த களத்து இடைதிமித திமிதிமி மத்தள(ம்) இடக்கைகள் செகசே சேஎனவெ துகு துகு துத்தென ஒத்துகள்துடிகள் இடி மிக ஒத்து முழக்கிடடிமுட டிமு டிமு டிட்டிம் எனத் தவில் எழும் ஓசைஇகலி அலகைகள் கைப்பறை கொட்டிடஇரண பயிரவி சுற்று நடித்திடஎதிரு நிசிசரரைப் பெலி இட்டு அருள் பெருமாளே. # 4
விடமடைசு வேலை அமரர்படை சூலம்விசையன்விடு பாண ...... மெனவேதான்விழியுமதி பார விதமுமுடை மாதர்வினையின்விளை வேதும் ...... அறியாதேகடியுலவு பாயல் பகலிரவெ னாதுகலவிதனில் மூழ்கி ...... வறிதாயகயவனறி வீனன் இவனுமுயர் நீடுகழலிணைகள் சேர ...... அருள்வாயேஇடையர்சிறு பாலை திருடிகொடு போகஇறைவன்மகள் வாய்மை ...... அறியாதேஇதயமிக வாடி யுடையபிளை நாதகணபதியெ னாம ...... முறைகூறஅடையலவர் ஆவி வெருவஅடி கூரஅசலுமறி யாமல் ...... அவரோடஅகல்வதென டாசொல் எனவுமுடி சாடஅறிவருளும் ஆனை ...... முகவோனே. # 5
கறுக்கும் அஞ்சன விழியிணை அயில்கொடுநெருக்கி நெஞ்சற எறிதரு பொழுதொருகனிக்குள் இன்சுவை அமுதுகும் ஒருசிறு ...... நகையாலேகளக்கொ ழுங்கலி வலைகொடு விசிறியெமனைக்கெ ழுந்திரும் எனமனம் உருகஒர்கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு ...... கொடுபோகிநறைத்த பஞ்சணை மிசையினில் மனமுறஅணைத்த கந்தனில் இணைமுலை எதிர்பொரநகத்த ழுந்திட அமுதிதழ் பருகியு ...... மிடறூடேநடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவெனஇசைத்து நன்கொடு மனமது மறுகிடநழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற ...... அருள்வாயேநிறைத்த தெண்டிரை மொகுமொகு மொகுவெனஉரத்த கஞ்சுகி முடிநெறு நெறுவெனநிறைத்த அண்டமு கடுகிடு கிடுவென ...... வரைபோலும்நிவத்த திண்கழல் நிசிசர ருரமொடுசிரக்கொ டுங்குவை மலைபுரை தரஇருநிணக்கு ழம்பொடு குருதிகள் சொரிதர ...... அடுதீராதிறற்க ருங்குழல் உமையவள் அருளுறுபுழைக்கை தண்கட கயமுக மிகவுளசிவக்கொ ழுந்தன கணபதி யுடன்வரும் ...... இளையோனேசினத்தொ டுஞ்சமன் உதைபட நிறுவியபரற்கு ளன்புறு புதல்வநன் மணியுகுதிருப்ப ரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே. # 10
குருதி மலசல மொழுகு நரகுடலரிய புழுவது நெளியு முடல்மதகுருபி நிணசதை விளையு முளைசளி ...... யுடலூடேகுடிக ளெனபல குடிகை வலிகொடுகுமர வலிதலை வயிறு வலியெனகொடுமை யெனபிணி கலக மிடுமிதை ...... யடல்பேணிமருவி மதனனுள் கரிய புளகிதமணிய சலபல கவடி மலர்புனைமதன கலைகொடு குவடு மலைதனில் ...... மயலாகாமனது துயரற வினைகள் சிதறிடமதன பிணியொடு கலைகள் சிதறிடமனது பதமுற வெனது தலைபத ...... மருள்வாயேநிருதர் பொடிபட அமரர் பதிபெறநிசித அரவளை முடிகள் சிதறிடநெறிய கிரிகட லெரிய வுருவிய ...... கதிர்வேலாநிறைய மலர்பொழி யமரர் முநிவரும்நிருப குருபர குமர சரணெனநெடிய முகிலுடல் கிழிய வருபரி ...... மயிலோனேபருதி மதிகனல் விழிய சிவனிடமருவு மொருமலை யரையர் திருமகள்படிவ முகிலென அரியி னிளையவ ...... ளருள்பாலாபரம கணபதி யயலின் மதகரிவடிவு கொடுவர விரவு குறமகளபய மெனவணை பழநி மருவிய ...... பெருமாளே. # 146
கொந்துத் தருகுழ லிருளோ புயலோவிந்தைத் தருநுதல் சிலையோ பிறையோகொஞ்சிப் பயில்மொழி அமுதோ கனியோ ...... விழிவேலோகொங்கைக் குடமிரு கரியோ கிரியோவஞ்சிக் கொடியிடை துடியோ பிடியோகொங்குற் றுயரல்கு லரவோ ரதமோ ...... எனுமாதர்திந்தித் திமிதிமி திமிதா திமிதோதந்தித் திரிகட கிடதா எனவேசிந்திப் படிபயில் நடமா டியபா ...... விகள்பாலேசிந்தைத் தயவுகள் புரிவே னுனையேவந்தித் தருள்தரு மிருசே வடியேசிந்தித் திடமிகு மறையா கியசீ ...... ரருள்வாயேவெந்திப் புடன்வரு மவுணே சனையேதுண்டித் திடுமொரு கதிர்வே லுடையாய்வென்றிக் கொருமலை யெனவாழ் மலையே ...... தவவாழ்வேவிஞ்சைக் குடையவர் தொழவே வருவாய்கஞ்சத் தயனுட னமரே சனுமேவிந்தைப் பணிவிடை புரிபோ தவர்மே ...... லருள்கூர்வாய்தொந்திக் கணபதி மகிழ்சோ தரனேசெங்கட் கருமுகில் மருகா குகனேசொந்தக் குறமகள் கணவா திறல்சேர் ...... கதிர்காமாசொம்பிற் பலவள முதிர்சோ லைகள்சூழ்இஞ்சித் திருமதிள் புடைசூ ழருள்சேர்துங்கப் பழநியில் முருகா இமையோர் ...... பெருமாளே. # 151
மகர மெறிகடல் விழியினு மொழியினுமதுப முரல்குழல் வகையினு நகையினும்வளமை யினுமுக நிலவினு மிலவினு ...... நிறமூசும்மதுர இதழினு மிடையினு நடையினுமகளிர் முகுளித முலையினு நிலையினும்வனச பரிபுர மலரினு முலரினு ...... மவர்நாமம்பகரு கினுமவர் பணிவிடை திரிகினுமுருகி நெறிமுறை தவறினு மவரொடுபகடி யிடுகினு மமளியி லவர்தரு ...... மநுராகப்பரவை படியினும் வசமழி யினுமுதலருணை நகர்மிசை கருணையொ டருளியபரம வொருவச னமுமிரு சரணமு ...... மறவேனேககன சுரபதி வழிபட எழுகிரிகடக கிரியொடு மிதிபட வடகுலகனக கனகுவ டடியொடு முறிபட ...... முதுசூதங்கதறு சுழிகட லிடைகிழி படமிகுகலக நிசிசரர் பொடிபட நடவியகலப மதகத துரகத ந்ருபகிரி ...... மயில்வாழ்வேதகன கரதல சிவசுத கணபதிசகச சரவண பரிமள சததளசயன வனசரர் கதிபெற முனிபெறு ...... புனமானின்தரள முகபட நெறிபட நிமிர்வனதருண புளகித ம்ருகமத தனகிரிதழுவ மயல்கொடு தனிமட லெழுதிய ...... பெருமாளே. # 371
கரிமுகக் கடகளிற் றதிககற் பகமதக்கஜமுகத் தவுணனைக் ...... கடியானைகடலையெட் பயறுநற் கதலியிற் கனிபலக்கனிவயிற் றினிலடக் ...... கியவேழம்அரிமுகத் தினனெதிர்த் திடுகளத் தினின்மிகுத்தமர்புரிக் கணபதிக் ...... கிளையோனேஅயிலெடுத் தசுரர்வெற் பலைவுறப் பொருதுவெற்றியைமிகுத் தறுமுகக் ...... குமரேசாநரிமிகுக் கிளைகளைப் பரியெனக் கடிவளக்கையில்பிடித் தெதிர்நடத் ...... திடுமீசன்நடனமிப் படியிடத் தினுமிசைத் தரையினிற்கரியுரித் தணிபவற் ...... கொருசேயேதுரிபெறச் சரிபொழிற் கனவயற் கழகுளத்துரியமெய்த் தரளமொய்த் ...... திடவீறிச்சுரர்துதித் திடமிகுத் தியல்தழைத் தருணையிற்சுடரயிற் சரவணப் ...... பெருமாளே. # 409
ஒருபது மிருபது மறுபது முடனறுமுணர்வுற இருபத ...... முளநாடிஉருகிட முழுமதி தழலென வொளிதிகழ்வெளியொடு வொளிபெற ...... விரவாதேதெருவினில் மரமென எவரொடு முரைசெய்துதிரிதொழி லவமது ...... புரியாதேதிருமகள் மருவிய திரள்புய அறுமுகதெரிசனை பெறஅருள் ...... புரிவாயேபரிவுட னழகிய பழமொடு கடலைகள்பயறொடு சிலவகை ...... பணியாரம்பருகிடு பெருவயி றுடையவர் பழமொழிஎழுதிய கணபதி ...... யிளையோனேபெருமலை யுருவிட அடியவ ருருகிடபிணிகெட அருள்தரு ...... குமரேசாபிடியொடு களிறுகள் நடையிட கலைதிரள்பிணையமர் திருமலை ...... பெருமாளே. # 523
சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநமசததள பாதா நமோநம ...... அபிராமதருணக தீரா நமோநம நிருபமர் வீரா நமோநமசமதள வூரா நமோநம ...... ஜகதீசபரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநமபரிமள நீபா நமோநம ...... உமைகாளிபகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநமபவுருஷ சீலா நமோநம ...... அருள்தாராய்இரவியு மாகாச பூமியும் விரவிய தூளேற வானவரெவர்களு மீடேற ஏழ்கடல் ...... முறையோவென்றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதா னிசாசரரிகல்கெட மாவேக நீடயில் ...... விடுவோனேமரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும்வசுவெனு மாகார ஈசனு ...... மடிபேணமயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதரவனசர ராதார மாகிய ...... பெருமாளே. # 584
கடினதட கும்ப நேரென வளருமிரு கொங்கை மேல்விழுகலவிதரு கின்ற மாதரொ ...... டுறவாடிக்கனவளக பந்தி யாகிய நிழல்தனிலி ருந்து தேனுமிழ்கனியிதழை மென்று தாடனை ...... செயலாலேதுடியிடைநு டங்க வாள்விழி குழைபொரநி ரம்ப மூடியதுகில்நெகிழ வண்டு கோகில ...... மயில்காடைதொனியெழவி ழைந்து கூரிய கொடுநகமி சைந்து தோள்மிசைதுயிலவச இன்ப மேவுத ...... லொழிவேனோஇடிமுரச றைந்து பூசல்செய் அசுரர்கள்மு றிந்து தூளெழஎழுகடல்ப யந்து கோவென ...... அதிகோபஎமபடரு மென்செய் வோமென நடுநடுந டுங்க வேல்விடுஇரணமுக சண்ட மாருத ...... மயிலோனேவடிவுடைய அம்பி காபதி கணபதிசி றந்து வாழ்தடவயலிநகர் குன்ற மாநக ...... ருறைவோனேவகைவகைபு கழ்ந்து வாசவன் அரிபிரமர் சந்த்ர சூரியர்வழிபடுதல் கண்டு வாழ்வருள் ...... பெருமாளே. # 625
குவளை பொருதிரு குழையை முடுகியகோல வேல்விழி ...... மடவார்தங்கொடிய ம்ருகமத புளக தனகிரிகூடி நாடொறு ...... மயலாகித்துவள வுருகிய சரச விதமதுசோர வாரிதி ...... யலையூடேசுழலு மெனதுயிர் மவுன பரமசுகோம கோததி ...... படியாதோகவள கரதல கரட விகடகபோல பூதர ...... முகமானகடவுள் கணபதி பிறகு வருமொருகார ணாகதிர் ...... வடிவேலாபவள மரகத கநக வயிரகபாட கோபுர ...... அரிதேரின்பரியு மிடறிய புரிசை தழுவியபாகை மேவிய ...... பெருமாளே. # 791
கரமு முளரியின் மலர்முக மதிகுழல்கனம தெணுமொழி கனிகதிர் முலைநகைகலக மிடுவிழி கடலென விடமென ...... மனதூடேகருதி யனநடை கொடியிடை யியல்மயில்கமழு மகிலுட னிளகிய ம்ருகமதகளப புளகித கிரியினு மயல்கொடு ...... திரிவேனும்இரவு பகலற இகலற மலமறஇயலு மயலற விழியினி ரிழிவரஇதய முருகியெ யொருகுள பதமுற ...... மடலூடேயெழுத அரியவள் குறமக ளிருதனகிரியில் முழுகின இளையவ னெனுமுரையினிமை பெறுவது மிருபத மடைவது ...... மொருநாளேசுரபி மகவினை யெழுபொருள் வினவிடமனுவி னெறிமணி யசைவுற விசைமிகுதுயரில் செவியினி லடிபட வினவுமி ...... னதிதீதுதுணிவி லிதுபிழை பெரிதென வருமநுஉருகி யரகர சிவசிவ பெறுமதொர்சுரபி யலமர விழிபுனல் பெருகிட ...... நடுவாகப்பரவி யதனது துயர்கொடு நடவியபழுதின் மதலையை யுடலிரு பிளவொடுபடிய ரதமதை நடவிட மொழிபவ ...... னருளாரூர்ப்படியு லறுமுக சிவசுத கணபதியிளைய குமரநி ருபபதி சரவணபரவை முறையிட அயில்கொடு நடவிய ...... பெருமாளே. # 821
கமலத் தேகு லாவு மரிவையைநிகர்பொற் கோல மாதர் மருள்தருகலகக் காம நூலை முழுதுண ...... ரிளைஞோர்கள்கலவிக் காசை கூர வளர்பரிமளகற் பூர தூம கனதனகலகத் தாலும் வானி னசையுமி ...... னிடையாலும்விமலச் சோதி ரூப இமகரவதனத் தாலு நாத முதலியவிரவுற் றாறு கால்கள் சுழலிருள் ...... குழலாலும்வெயிலெப் போதும் வீசு மணிவளைஅணிபொற் றோள்க ளாலும் வடுவகிர்விழியிற் பார்வை யாலு மினியிடர் ...... படுவேனோசமரிற் பூதம் யாளி பரிபிணிகனகத் தேர்கள் யானை யவுணர்கள்தகரக் கூர்கொள் வேலை விடுதிற ...... லுருவோனேசமுகப் பேய்கள் வாழி யெனஎதிர்புகழக் கானி லாடு பரிபுரசரணத் தேக வீர அமைமன ...... மகிழ்வீராஅமரர்க் கீச னான சசிபதிமகள்மெய்த் தோயு நாத குறமகள்அணையச் சூழ நீத கரமிசை ...... யுறுவேலாஅருளிற் சீர்பொ யாத கணபதிதிருவக் கீசன் வாழும் வயலியின்அழகுக் கோயில் மீதில் மருவிய ...... பெருமாளே. # 906
நெய்த்த சுரிகுழ லறலோ முகிலோபத்ம நறுநுதல் சிலையோ பிறையோநெட்டை யிணைவிழி கணையோ பிணையோ ...... இனிதூறும்நெக்க அமுதிதழ் கனியோ துவரோசுத்த மிடறது வளையோ கமுகோநிற்கு மிளமுலை குடமோ மலையோ ...... அறவேதேய்ந்தெய்த்த இடையது கொடியோ துடியோமிக்க திருவரை அரவோ ரதமோஇப்பொ னடியிணை மலரோ தளிரோ ...... எனமாலாய்இச்சை விரகுடன் மடவா ருடனேசெப்ப மருளுட னவமே திரிவேன்ரத்ந பரிபுர இருகா லொருகால் ...... மறவேனேபுத்த ரமணர்கள் மிகவே கெடவேதெற்கு நரபதி திருநீ றிடவேபுக்க அனல்வய மிகஏ டுயவே ...... உமையாள்தன்புத்ர னெனஇசை பகர்நூல் மறைநூல்கற்ற தவமுனி பிரமா புரம்வாழ்பொற்ப கவுணியர் பெருமா னுருவாய் ...... வருவோனேசத்த முடையஷண் முகனே குகனேவெற்பி லெறிசுட ரயிலா மயிலாசத்தி கணபதி யிளையா யுளையா ...... யொளிகூருஞ்சக்ர தரஅரி மருகா முருகாஉக்ர இறையவர் புதல்வா முதல்வாதட்ப முளதட வயலூ ரியலூர் ...... பெருமாளே. # 913
பரிவுறு நாரற் றழல்மதி வீசச்சிலைபொரு காலுற் ...... றதனாலேபனிபடு சோலைக் குயிலது கூவக்குழல்தனி யோசைத் ...... தரலாலேமருவியல் மாதுக் கிருகயல் சோரத்தனிமிக வாடித் ...... தளராதேமனமுற வாழத் திருமணி மார்பத்தருள்முரு காவுற் ...... றணைவாயேகிரிதனில் வேல்விட் டிருதொளை யாகத்தொடுகும ராமுத் ...... தமிழோனேகிளரொளி நாதர்க் கொருமக னாகித்திருவளர் சேலத் ...... தமர்வோனேபொருகிரி சூரக் கிளையது மாளத்தனிமயி லேறித் ...... திரிவோனேபுகர்முக வேழக் கணபதி யாருக்கிளையவி நோதப் ...... பெருமாளே. # 934
சுற்றத் தவர்களு மக்களு மிதமுளசொற்குற் றரிவையும் விட்டது சலமிதுசுத்தச் சலமினி சற்றிது கிடைபடு ...... மெனமாழ்கித்துக்கத் தொடுகொடி தொட்டியெ யழுதழல்சுட்டக் குடமொடு சுட்டெரி கனலொடுதொக்குத் தொகுதொகு தொக்கென இடுபறை ...... பிணமூடச்சற்றொப் புளதொரு சச்சையு மெழுமுடல்சட்டப் படவுயிர் சற்றுடன் விசியதுதப்பிற் றவறுறு மத்திப நடையென ...... உரையாடிச்சத்திப் பொடுகரம் வைத்திடர் தலைமிசைதப்பிற் றிதுபிழை யெப்படி யெனுமொழிதத்தச் சடம்விடு மப்பொழு திருசர ...... ணருள்வாயேசிற்றிற் கிரிமகள் கொத்தலர் புரிகுழல்சித்ரப் ப்ரபைபுனை பொற்பின ளிளமயில்செற்கட் சிவகதி யுத்தமி களிதர ...... முதுபேய்கள்திக்குச் செககெண தித்தரி திகுதிகுசெச்செச் செணக்ருத டொட்டரி செணக்ருதடெட்டெட் டுடுடுடு தத்தரி தரியென ...... நடமாடுங்கொற்றப் புலியதள் சுற்றிய அரனருள்குட்டிக் கரிமுக னிக்கவ லமுதுசெய்கொச்சைக் கணபதி முக்கண னிளையவ ...... களமீதேகுப்புற் றுடனெழு சச்சரி முழவியல்கொட்டச் சுரர்பதி மெய்த்திட நிசிசரர்கொத்துக் கிளையுடல் பட்டுக அமர்செய்த ...... பெருமாளே. # 1158