கச்சியப்ப முனிவரின் தோத்திர அடக்கம்
பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோஎந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோசந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோஅந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம். 1
உலகம் முழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும்பொருள் எவன்அவ்உலகிற்பிறக்கும் விவகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்தஉலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம். 2
இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்கடவுள் முதலோர்க்கு ஊறின்றி கருமம் எவனால் முடிவுறும் அத்தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் சரணம் அடைகின்றோம். 3
மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலானதீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம். 4
செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்பொய்யில் இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம். 5
வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகையவேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபரநாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன்எவன் எண்குணன் எவன்அப்போதமுதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம். 6
மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்நண்ணி அமர்வான் எவன்தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம். 7
பாச அறிவில் பசுஅறிவில் பற்றற்கரிய பரன்யாவன்பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவானதேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம். 8