மூத்த பிள்ளையார் வழிபாடு ›

திருஇரட்டைமணிமாலை

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும்ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்காதலால் கூப்புவர்தம் கை. [1]
கைக்கும் பிணியொடு கான் தலைப்படும் ஏல்வையினில்எய்க்கும் கவலைக் கிடைந்தடைந் தேன்வெம்மை நாவளைக்கும்பைக்கும் அரவரை யான்தந்த பாய்மத யானைபத்துத்திக்கும் பணிநுதற் கண்திரு வாளன் திருவடியே. [2]
அடியமர்ந்து கொள்வாயே நெஞ்சமே அப்பம்இடிஅவலோ டெள்உண்டை கன்னல் வடிசுவையில்தாழ்வானை ஆழ்வானைத் தன்னடியார் உள்ளத்தேவாழ்வானை வாழ்த்தியே வாழ். [3]
வாழைக் கனிபல வின்கனி மாங்கனி தாஞ்சிறந்தகூழைச் சுருள்குழை அப்பம்எள் ளுண்டையெல் லாந்துறுத்தும்பேழைப் பெருவயிற் றோடும் புகுந்தென் உளம்பிரியான்வேழத் திருமுகத் துச்செக்கர் மேனி விநாயகனே. [4]
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்விநாயகனே வேட்கைதணி விப்பான் விநாயகனேவிண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்கண்ணிற் பணிமின் கனிந்து. [5]
கனிய நினைவொடு நாடொறும் காதற் படும்அடியார்க்கினியன் இனியொ ரின்னாங் கிலம்எவ ரும்வணங்கும்பனிவெண் பிறைநறுங் கொன்றைச் சடைப்பலி தேரியற்கைமுனிவன் சிறுவன் பெருவெங்கொல் யானை முகத்தவனே. [6]
யானை முகத்தான் பொருவிடையான் சேய்அழகார்மான மணிவண்ணன் மாமருகன் மேல்நிகழும்வெள்ளக் குமிழி மதத்து விநாயகன்என்உள்ளக் கருத்தின் உளன். [7]
உளதள வில்லதொர் காதல்என் நெஞ்சில்வன் நஞ்சமுண்டவளரிள மாமணி கண்டன்வண் டாடுவண் கோதைபங்கத்திளவளர் மாமதிக் கண்ணியெம் மான்மகன் கைம்முகத்துக்களகள மாமதஞ் சேர்களி யானைக் கணபதியே. [8]
கணங்கொண்ட வல்வினைகள் கண்கொண்ட நெற்றிப்பணங்கொண்ட பாந்தட் சடைமேல் மணங்கொண்டதாதகத்த தேன்முரலுங் கொன்றையான் தந்தளித்தபோதகத்தின் தாள்பணியப் போம். [9]
போகபந் தத்தந்தம் இன்றிநிற் பீர்புனை தார்முடிமேல்நாகபந் தத்தந்த நாள்அம் பிறையிறை யான்பயந்தமாகபந் தத்தந்த மாமழை போல்மதத் துக்கதப்போர்ஏகதந் தத்துஎந்தை செந்தாள் இணைபணிந் தேத்துமினே. [10]
ஏத்தியே என்னுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்மாத்தனிவெண் கோட்டு மதமுகத்துத் தூத்தழல்போல்செக்கர்த் திருமேனிச் செம்பொற் கழல்ஐங்கைமுக்கட் கடாயானை முன் [11]
முன்னிளங் காலத்தி லேபற்றி னேன்வெற்றி மீன்உயர்த்தமன்னிளங் காமன்தன் மைத்துன னேமணி நீலகண்டத்தென்னிளங் காய்களி றேஇமை யோர்சிங்க மே,உமையாள்தன்னிளங் காதல னேசர ணாவுன் சரணங்களே. [12]
சரணுடை யேன்என்று தலைதொட் டிருக்கமுரண்உடையேன் அல்லேன் நான்முன்னம் திரள்நெடுங்கோட்டண்டத்தான் அப்புறத்தான் ஆனைமுகத் தான்அமரர்பண்டத்தான் தாள்பணியாய் பண்டு. [13]
பண்டம்தம் ஆதரத் தான்என் றினியன வேபலவும்கொண்டந்த நாள்குறு காமைக் குறுகுவர் கூர்உணர்வில்கண்டந்த நீண்முடிக் கார்மத வார்சடைக் கற்றைஒற்றைவெண்தந்த வேழ முகத்தெம் பிரானடி வேட்கையரே. [14]
வேட்கை வினைமுடித்து மெய்யடியார்க் கின்பஞ்செய்துஆட்கொண் டருளும் அரன்சேயை வாட்கதிர்கொள்காந்தார, மார்பிற் கமழ்தார்க் கணபதியைவேந்தா உடைத்தமரர் விண். [15]
விண்ணுதல் நுங்கிய விண்ணும்மண் ணும்செய் வினைப்பயனும்பண்ணுதல் நுங்கடன் என்பர்மெய் அன்பர்கள் பாய்மதமாக்கண்ணுதல் நுங்கிய நஞ்சமுண் டார்கரு மாமிடற்றுப்பெண்ணுதல் நும்பிரி யாஒரு பாகன் பெருமகனே. [16]
பெருங்காதல் என்னோடு பென்னோடை நெற்றிமருங்கார வார்செவிகள் வீசி ஒருங்கேதிருவார்ந்த செம்முகத்துக் கார்மதங்கள் சோரவருவான்தன் நாமம் வரும். [17]
வருகோள் தருபெருந் தீமையும் காலன் தமரவர்கள்அரு கோட் டருமவ ராண்மையும் காய்பவன் கூர்ந்தன்புதருகோள் தருமர பிற்பத்தர் சித்தத் தறியணையும்ஒருகோட் டிருசெவி முக்கண்செம் மேனிய ஒண்களிறே. [18]
களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்ஒளியானைப் பாரோர்க் குதவும் அளியானைக்கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்நண்ணுவதும் நல்லார் கடன். [19]
நல்லார் பழிப்பில் எழிற்செம் பவளத்தை நாணநின்றபொல்லா முகத்தெங்கள் போதக மேபுரம் மூன்றெரித்தவில்லான் அளித்த விநாயக னேயென்று மெய்ம்மகிழவல்லார் மனத்தன்றி மாட்டாள் இருக்க மலர்த்திருவே. [20]