முருகன் வழிபாடு ›

திருப்புகழ்

விறல்மார னைந்து மலர்வாளி சிந்தமிகவானி லிந்து ...... வெயில்காயமிதவாடை வந்து தழல்போல வொன்றவினைமாதர் தந்தம் ...... வசைகூறகுறவாணர் குன்றி லுறைபேதை கொண்டகொடிதான துன்ப ...... மயல்தீரகுளிர்மாலை யின்க ணணிமாலை தந்துகுறைதீர வந்து ...... குறுகாயோமறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்துவழிபாடு தந்த ...... மதியாளாமலைமாவு சிந்த அலைவேலை யஞ்சவடிவேலெ றிந்த ...... அதிதீராஅறிவால றிந்து னிருதாளி றைஞ்சுமடியாரி டைஞ்சல் ...... களைவோனேஅழகான செம்பொன் மயில்மேல மர்ந்துஅலைவா யுகந்த ...... பெருமாளே.
நாத விந்துக லாதீ நமோநமவேத மந்த்ரசொ ரூபா நமோநமஞான பண்டித சாமீ நமோநம ...... வெகுகோடிநாம சம்புகு மாரா நமோநமபோக அந்தரி பாலா நமோநமநாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்சேத தண்டவி நோதா நமோநமகீத கிண்கிணி பாதா நமோநமதீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராசதீப மங்கள சோதீ நமோநமதூய அம்பல லீலா நமோநமதேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்ஈத லும்பல கோலா லபூசையும்ஓத லுங்குண ஆசா ரநீதியும்ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாதஏழ்த லம்புகழ் காவே ரியால்விளைசோழ மண்டல மீதே மநோகரராச கெம்பிர நாடாளு நாயக ...... வயலூராஆத ரம்பயி லாரூ ரர்தோழமைசேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகிஆதி யந்தவு லாவா சுபாடியசேரர் கொங்குவை காவூர் நனாடதில்ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச்சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம்நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல்நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்நிறைப்புக முரைக்குஞ் ...... செயல்தாராய்தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்தகுத்தகு தகுத்தந் ...... தனபேரிதடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்தளத்துட னடக்குங் ...... கொடுசூரர்சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலாதினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே.
பரவு நெடுங்கதி ருலகில் விரும்பியபவனி வரும்படி ...... யதனாலேபகர வளங்களு நிகர விளங்கியஇருளை விடிந்தது ...... நிலவாலேவரையினி லெங்கணு முலவி நிறைந்ததுவரிசை தரும்பத ...... மதுபாடிவளமொடு செந்தமி முரைசெய அன்பருமகிழ வரங்களு ...... மருள்வாயேஅரஹர சுந்தர அறுமுக என்றுனிஅடியர் பணிந்திட ...... மகிழ்வோனேஅசலநெ டுங்கொடி அமையுமை தன்சுதகுறமக ளிங்கித ...... மணவாளாகருதரு திண்புய சரவண குங்குமகளபம ணிந்திடு ...... மணிமார்பாகனக மிகும்பதி மதுரை வளம்பதியதனில் வளர்ந்தருள் ...... பெருமாளே.
ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றேஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றேகூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றேகுன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றேமாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றேவள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றேஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.