முருகன் வழிபாடு ›

முருகப் பெருமான் போற்றி

ஓம் அகரமாய் உலகுக்கு ஆனாய் போற்றி (1)ஓம் அகத்திணை ஐந்தின் பயனே போற்றி (2)ஓம் அகவிருள் அகற்றும் அறிவொளியே போற்றி (3)ஓம் அகத்தியர்க்கு அருந்தமிழ் அளித்தோய் போற்றி (4)ஓம் அங்கணன் அங்கணி நடுவமர்ந்தாய் போற்றி (5)ஓம் அங்காரனுக் காற்றல் அளிப்பாய் போற்றி (6)ஓம் அசவாகனம் ஊறும் அண்ணலே போற்றி (7)ஓம் அசுரரை அழித்த ஐயனே போற்றி (8)ஓம் அணிமா மகிமா ஆக்குவாய் போற்றி (9)ஓம் அண்ட பகிரண்டம் ஆட்டுவாய் போற்றி (10)ஓம் அண்ணனை யானையா அழைத்தாய் போற்றி (11)ஓம் அத்தி வாகனமுடைச் சித்தனே போற்றி (12)ஓம் அத்துவா மூர்த்தியாம் தத்துவா போற்றி! (13)ஓம் அத்துவிதக் கலப்பு அளிப்போய் போற்றி! (14)ஓம் அனுபூதி அடியார்க் கருள்வாய் போற்றி! (15)ஓம் அபயம் தந்தருள் உபாசனா போற்றி! (16)ஓம் அபிடேகம் ஆடியருள் நிபிடனே போற்றி! (17)ஓம் அபிராமனான கவிராசனே போற்றி! (18)ஓம் அமலையின் மகனாம் விமலா போற்றி! (19)ஓம் அம்பிகை மகனாம் நம்பனே போற்றி! (20)ஓம் அயனைச் சிறையிட்ட நயனே போற்றி! (21)ஓம் அயிராணி மருகனாய் ஆனாய் போற்றி! (22)ஓம் அரவணைத் துயின்றோன் அருமருகா போற்றி! (23)ஓம் அழகனாய் விளங்கும் குழகனே போற்றி! (24)ஓம் ஆங்காரம் போக்கும் ஓங்காரா போற்றி! (25)ஓம் ஆண்டிக் கோலத்துத் தாண்டவ போற்றி! (26)ஓம் ஆதவற் கொளிதரும் நாதனே போற்றி! (27)ஓம் ஆலமர் செல்வனின் வேலவா போற்றி! (28)ஓம் ஆழி கைக்கொண்ட பூழியாய் போற்றி! (29)ஓம் ஆரிடர் வழிபாடு போரூரா போற்றி! (30)ஓம் இகபரம் அருளும் இளையோய் போற்றி! (31)ஓம் இங்கிதப் பயனாம் நங்கடம்பா போற்றி! (32)ஓம் இசையை வளர்க்கும் நசையோய் போற்றி! (33)ஓம் இடும்பனுக் கருள்புரி இறைவா போற்றி! (34)ஓம் ஈன்றாய்ப் பணியும் சான்றோய் போற்றி! (35)ஓம் உயிர்களுக்கு உய்தி அளிப்பாய் போற்றி! (36)ஓம் ஊழிபல படைத்த உத்தமா போற்றி! (37)ஓம் எஃகம் கையேந்தும் ஏந்தலே போற்றி! (38)ஓம் ஏமவாழ்க்கை ஈவோய் போற்றி! (39)ஓம் ஐம்பொறி அடக்குவோர்க் கருள்புரி போற்றி! (40)ஓம் ஒளியாய்த் தோன்றும் ஒருவா போற்றி! (41)ஓம் ஓம்எனும் பொருளாய் ஓங்குவாய் போற்றி! (42)ஓம் கஞ்சனைச் சிறையிட்ட மஞ்சனே போற்றி! (43)ஓம் பரங்குன்றம் வீற்றிடு பரமனே போற்றி (44)ஓம் செந்தில் நகருறை சேவகா போற்றி! (45)ஓம் ஆவினக்குடி அமர்தரு காவலா போற்றி! (46)ஓம் திருவேரகம் திகழ்ந்திடு திருவே போற்றி! (47)ஓம் குன்றுதோறாடும் குமரனே போற்றி! (48)ஓம் பழமுதிர் சோலைப் பராபரா போற்றி! (49)ஓம் திருத்தணி வீற்றருள் தீரனே போற்றி (50)ஓம் மருதமலை மகிழ்ந்தருள் முருகனே போற்றி! (51)ஓம் குருந்தமலை வீற்றருள் குழந்தாய் போற்றி! (52)ஓம் பொன்மலை அமர்ந்த பொங்கவா போற்றி! (53)ஓம் செங்கோட்டு வேலவச் செம்மல் போற்றி! (54)ஓம் சிவன்மலை சிறக்கும் சிந்தையோய் போற்றி! (55)ஓம் சென்னிமலை நண்ணியுறை அண்ணலே போற்றி! (56)ஓம் சிற்றம்பலம் விளங்கும் நற்றவா போற்றி! (57)ஓம் முத்துக் குமர வித்தகா போற்றி! (58)ஓம் பழனிமலை வீற்றருள் பண்ணவா போற்றி! (59)ஓம் கதிர்கா மத்துறை கதிர்வேலா போற்றி! (60)ஓம் வள்ளிமலை வீற்றருள் வள்ளலே போற்றி! (61)ஓம் வள்ளியை மணந்த வரதனே போற்றி! (62)ஓம் திருக்கழுக்குன்றத்து ஒருத்தனே போற்றி! (63)ஓம் மயிலமலை மகிழ் மகிபா போற்றி! (64)ஓம் சிராப்பள்ளிக் குன்றமர் பராபரனே போற்றி! (65)ஓம் கற்குடி வீற்றருள் கன்னலே போற்றி! (66)ஓம் இரத்தினகிரி வாழ் தத்துவா போற்றி! (67)ஓம் விராலி மலை உறை வீரனே போற்றி! (68)ஓம் கொடுங்குன்றத் தருள்புரி கோவே போற்றி! (69)ஓம் குன்றக்குடி உறை குகனே போற்றி! (70)ஓம் கொல்லிமலை உறை செல்வா போற்றி! (71)ஓம் ஞானமலை ஞான பண்டிதா போற்றி! (72)ஓம் ஊதிமலை உறை போதகா போற்றி! (73)ஓம் குருஇருடி மலைஉறை குருவே போற்றி! (74)ஓம் தென்சேரி மலைவாழ் சேவகா போற்றி! (75)ஓம் கொங்கண கிரியருள் பொங்கவா போற்றி! (76)ஓம் தீர்த்தமலைத் தெய்வ நாயகா போற்றி! (77)ஓம் கனகமலைக் கந்தக் கடவுளே போற்றி! (78)ஓம் புகழிமலைப் புகழ் புண்ணிய போற்றி! (79)ஓம் பொதிய மலைவாழ் அதிபா போற்றி! (80)ஓம் கழுகுமலை உறை முதல்வா போற்றி! (81)ஓம் பகையழிக்க முகம் கொண்ட பண்ணவா போற்றி! (82)ஓம் பேரின்ப வாழ்வளிக்கும் பெருமுகத்தோய் போற்றி! (83)ஓம் தமிழ்மறை தாங்கும் சிரத்தோய் போற்றி! (84)ஓம் பாசம் நீக்கும் பாமுகத்தோய் போற்றி! (85)ஓம் தேவியர்க் கருள்தென் முகத்தோய் போற்றி! (86)ஓம் அடியார்க் கருள்புரி முகத்தோய் போற்றி! (87)ஓம் தேவர்க் குதவும் திருக்கரத்தாய் போற்றி! (88)ஓம் தெய்வ மகளிர்க்கருள் தீங்கரத்தாய் போற்றி! (89)ஓம் மாரிபொழியும் மலர்க் கரத்தாய் போற்றி! (90)ஓம் மாலை ஏற்கும் மாக்கரத்தாய் போற்றி! (91)ஓம் மார்பகம் வைத்த ஏர்க்கரத்தாய் போற்றி! (92)ஓம் வாம மருங்கில் கரமுடைத்தாய் போற்றி! (93)ஓம் உய்ந்த குறங்கில் ஒருகரத்தாய் போற்றி! (94)ஓம் மொய்த்த சிறுதுடிக் கையாய் போற்றி! (95)ஓம் மணிசேர்ந்த மாண்புக் கரத்தாய் போற்றி! (96)ஓம் அங்குசம் சேர்த்த அருங்கையாய் போற்றி! (97)ஓம் கேடகம் சுழற்றும் செங்கையாய் போற்றி! (98)ஓம் கதிரொளி விளங்கும் கரத்தாய் போற்றி! (99)ஓம் வச்சிரப்படை கொள் விச்சகா போற்றி! (100)ஓம் கலப்பை ஏந்தும் வலத்தாய் போற்றி! (101)ஓம் வேற்கை கொண்ட விமலா போற்றி! (102)ஓம் கோழிக்கொடி ஏந்தும் ஊழியாய் போற்றி! (103)ஓம் தோமரம் ஏந்தும் தோகாய் போற்றி! (104)ஓம் நக்கீரர்க் கருள் நாதா போற்றி! (105)ஓம் கச்சியப்பர்க் கருள்புரி கடவுளே போற்றி! (106)ஓம் குமரகுரு பரர்க்கருள் குருவே போற்றி! (107)ஓம் அருண கிரிக்கருள் தருணா போற்றி! (108)