மங்கல வாழ்த்து
ஆறிரு தடந்தோள் வாழ்க; அறுமுகம் வாழ்க; வெற்பைக்கூறுசெய் தனிவேல் வாழ்க; குக்குடம் வாழ்க; செவ்வேள்ஏறிய மஞ்ஞை வாழ்க; யானைதன் அணங்கு வாழ்க;மாறிலா வள்ளி வாழ்க; வாழ்க சீர் அடியாரெல்லாம்!
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடிநாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்துஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பதேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றிவாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!
மாமறை முனிவர் வாழ்க மரகத வல்லி யோடும்பாமலி புலவர் போற்றும் பட்டிநா யகனார் வாழ்ககாமரு வெள்ளி மன்றிற் கண்ணுத னடனம் வாழ்ககோமனு நீதி வாழ்க குவலயம் முழுதும் வாழ்க.
வையம் நீடுக மாமழை மன்னுகமெய் விரும்பிய அன்பர் விளங்குகசைவ நன்னெறி தான்தழைத் தோங்குகதெய்வ வெண்திரு நீறு சிறக்கவே.
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்கநான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்கமேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகராமருதமலை ஆண்டவனுக்கு அரோகராகுருந்தமலை குமரனுக்கு அரோகராபழனிமலை ஆண்டவனுக்கு அரோகராசென்னிமலை ஆண்டவனுக்கு அரோகராசிவன்மலை ஆண்டவனுக்கு அரோகராதிருப்பரங்குன்ற முருகனுக்கு அரோகராதிருச்செந்தூர் வேலனுக்கு அரோகராதிருவாவினன்குடி முருகனுக்கு அரோகராசுவாமிமலை சுவாமிநாத சாமிக்கு அரோகராதிருத்தணி முருகனுக்கு அரோகராபழமுதிர்சோலை ஆண்டவனுக்கு அரோகரா