முருகன் வழிபாடு ›

கந்தர் அனுபூதி

முருகா முருகா முருகா முருகாமுருகா முருகா முருகா முருகாமுருகா முருகா முருகா முருகாமுருகா முருகா முருகா முருகா

காப்பு

நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்செஞ்சொற் புனை மாலை சிறந்திடவேபஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.
ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்பாடும் பணியே பணியா அருள்வாய்தேடும் கயமா முகனைச் செருவில்சாடும் தனி யானைச் சகோதரனே. (1)
உல்லாச, நிராகுல, யோக இதச்சல்லாப, விநோதனும் நீ அலையோ?எல்லாம் அற, என்னை இழந்த நலம்சொல்லாய், முருகா சுரபூ பதியே. (2)
வானோ? புனல் பார் கனல் மாருதமோ?ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்தானோ? பொருளாவது சண்முகனே. (3)
வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,தொளைபட்டு உருவத் தொடு வேலவனே. (4)
மக மாயை களைந்திட வல்ல பிரான்முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனேஅகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும்சகமாயையுள் நின்று தயங்குவதே. (5)
திணியான மனோ சிலை மீது, உனதாள்அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?பணியா? .. என, வள்ளி பதம் பணியும்தணியா அதிமோக தயா பரனே. (6)
கெடுவாய் மனனே, கதி கேள், கரவாதுஇடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்சுடுவாய் நெடு வேதனை தூள்படவேவிடுவாய் விடுவாய் வினை யாவையுமே. (7)
அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப்பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவாகுமரன் கிரிராச குமாரி மகன்சமரம் பொரு தானவ நாசகனே. (8)
மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்?தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்நிட்டூர நிராகுல, நிர்பயனே. (9)
கார் மா மிசை காலன் வரில், கலபத்தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய்தார் மார்ப, வலாரி தலாரி எனும்சூர்மா மடியத் தொடுவே லவனே. (10)
கூகா என என் கிளை கூடி அழப்போகா வகை, மெய்ப்பொருள் பேசியவாநாகாசல வேலவ நாலு கவித்தியாகா சுரலோக சிகாமணியே. (11)
செம்மான் மகளைத் திருடும் திருடன்பெம்மான் முருகன், பிறவான், இறவான்சும்மா இரு, சொல் அற என்றலுமேஅம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. (12)
முருகன், தனிவேல் முனி, நம் குரு என்றுஅருள் கொண்டு அறியார் அறியும் தரமோஉரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே. (13)
கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்றுஉய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்ஐவாய் வழி செல்லும் அவாவினையே. (14)
முருகன், குமரன், குகன், என்று மொழிந்துஉருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய்பொரு புங்கவரும், புவியும் பரவும்குருபுங்கவ, எண் குண பஞ்சரனே. (15)
பேராசை எனும் பிணியில் பிணிபட்டுஓரா வினையேன் உழலத் தகுமோ?வீரா, முது சூர் பட வேல் எறியும்சூரா, சுர லோக துரந்தரனே. (16)
யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்தாமே பெற, வேலவர் தந்ததனால்பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்நாமேல் நடவீர், நடவீர் இனியே. (17)
உதியா, மரியா, உணரா, மறவா,விதி மால் அறியா விமலன் புதல்வா,அதிகா, அநகா, அபயா, அமராபதி காவல, சூர பயங் கரனே. (18)
வடிவும் தனமும் மனமும் குணமும்குடியும் குலமும் குடிபோ கியவாஅடி அந்தம் இலா அயில் வேல் அரசேமிடி என்று ஒரு பாவி வெளிப்படினே. (19)
அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்உரிதா உபதேசம் உணர்த்தியவாவிரிதாரண, விக்ரம வேள், இமையோர்புரிதாரக, நாக புரந்தரனே. (20)
கருதா மறவா நெறிகாண, எனக்குஇருதாள் வனசம் தர என்று இசைவாய்வரதா, முருகா, மயில் வாகனனேவிரதா, சுர சூர விபாடணனே. (21)
காளைக் குமரேசன் எனக் கருதித்தாளைப் பணியத் தவம் எய்தியவாபாளைக் குழல் வள்ளி பதம் பணியும்வேளைச் சுர பூபதி, மேருவையே. (22)
அடியைக் குறியாது அறியா மையினால்முடியக் கெடவோ? முறையோ? முறையோ?வடி விக்ரம வேல் மகிபா, குறமின்கொடியைப் புணரும் குண பூதரனே. (23)
கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலேசேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோசூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்போர் வேல, புரந்தர பூபதியே. (24)
மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்துஐயோ, அடியேன் அலையத் தகுமோ?கையோ, அயிலோ, கழலோ முழுதும்செய்யோய், மயில் ஏறிய சேவகனே. (25)
ஆதாரம் இலேன், அருளைப் பெறவேநீதான் ஒரு சற்றும் நினைந்திலையேவேதாகம ஞான விநோத, மனோதீதா சுரலோக சிகாமணியே. (26)
மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?பொன்னே, மணியே, பொருளே, அருளே,மன்னே, மயில் ஏறிய வானவனே. (27)
ஆனா அமுதே, அயில் வேல் அரசே,ஞானாகரனே, நவிலத் தகுமோ?யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும்தானாய் நிலை நின்றது தற்பரமே. (28)
இல்லே எனும் மாயையில் இட்டனை நீபொல்லேன் அறியாமை பொறுத்திலையேமல்லேபுரி பன்னிரு வாகுவில் என்சொல்லே புனையும் சுடர் வேலவனே. (29)
செவ்வான் உருவில் திகழ் வேலவன், அன்றுஒவ்வாதது என உணர்வித் ததுதான்அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே. (30)
பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலேவீழ்வாய் என என்னை விதித்தனையேதாழ்வானவை செய்தன தாம் உளவோ?வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே. (31)
கலையே பதறிக், கதறித் தலையூடுஅலையே படுமாறு, அதுவாய் விடவோ?கொலையே புரி வேடர் குலப் பிடிதோய்மலையே, மலை கூறிடு வாகையனே. (32)
சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்விந்தாடவி என்று விடப் பெறுவேன்மந்தாகினி தந்த வரோதயனேகந்தா, முருகா, கருணாகரனே. (33)
சிங்கார மடந்தையர் தீநெறி போய்மங்காமல் எனக்கு வரம் தருவாய்சங்க்ராம சிகாவல, சண்முகனேகங்காநதி பால, கிருபாகரனே. (34)
விதிகாணும் உடம்பை விடா வினையேன்கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய்?மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின்துதியா விரதா, சுர பூபதியே. (35)
நாதா, குமரா நம என்று அரனார்ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்?வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்பாதா குறமின் பத சேகரனே. (36)
கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன்பரிவாரம் எனும் பதம் மேவலையேபுரிவாய் மனனே பொறையாம் அறிவால்அரிவாய் அடியோடும் அகந்தையையே. (37)
ஆதாளியை, ஒன்று அறியேனை அறத்தீது ஆளியை ஆண்டது செப்புமதோகூதாள கிராத குலிக்கு இறைவாவேதாள கணம் புகழ் வேலவனே. (38)
மாஏழ் சனனம் கெட மாயைவிடாமூஏடணை என்று முடிந்திடுமோகோவே, குறமின் கொடிதோள் புணரும்தேவே சிவ சங்கர தேசிகனே. (39)
வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன்மனையோடு தியங்கி மயங்கிடவோ?சுனையோடு, அருவித் துறையோடு, பசுந்தினையோடு, இதணோடு திரிந்தவனே. (40)
சாகாது, எனையே சரணங் களிலேகா கா, நமனார் கலகம் செயும் நாள்வாகா, முருகா, மயில் வாகனனேயோகா, சிவ ஞான உபதேசிகனே. (41)
குறியைக் குறியாது குறித்து அறியும்நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்றுஅறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே. (42)
தூசா மணியும் துகிலும் புனைவாள்நேசா முருகா நினது அன்பு அருளால்ஆசா நிகளம் துகளாயின பின்பேசா அநுபூதி பிறந்ததுவே. (43)
சாடும் தனிவேல் முருகன் சரணம்சூடும் படி தந்தது சொல்லு மதோ?வீடும், சுரர் மாமுடி, வேதமும், வெம்காடும், புனமும் கமழும் கழலே. (44)
கரவாகிய கல்வி உளார் கடை சென்றுஇரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ?குரவா, குமரா, குலிசாயுத, குஞ்சரவா, சிவயோக தயாபரனே. (45)
எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீசிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்கந்தா, கதிர் வேலவனே, உமையாள்மைந்தா, குமரா, மறை நாயகனே. (46)
ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப்பேறா அடியேன், பெறுமாறு உளதோ?சீறாவரு சூர் சிதைவித்து, இமையோர்கூறா உலகம் குளிர்வித்தவனே. (47)
அறிவு ஒன்று அற நின்று, அறிவார் அறிவில்பிறிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ?செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதையவெறி வென்றவரோடு உறும் வேலவனே. (48)
தன்னந் தனி நின்றது, தான் அறியஇன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ?மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார்கின்னம் களையும் கிருபை சூழ் சுடரே. (49)
மதிகெட்டு அறவாடி, மயங்கி, அறக்கதிகெட்டு, அவமே கெடவோ கடவேன்?நதி புத்திர, ஞான சுகாதிப, அத்திதி புத்திரர் வீறு அடு சேவகனே. (50)
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. (51)