கலைமகள் வழிபாடு ›

சகலகலா வல்லி மாலை

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்தாங்க என் வெள்ளை உள்ளத்தண்தாமரைக்குத் தகாது கொலோ?சகம் ஏழும் அளித்துஉண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக,உண்டாக்கும் வண்ணம்கண்டான் சுவைகொள் கரும்பே!சகல கலாவல்லியே! 1
நாடும் பொருள்சுவை சொற்சுவைதோய்தர, நாற்கவியும்பாடும் பணியில் பணித்து அருள்வாய்;பங்கய ஆசனத்தில்கூடும் பசும்பொன் கொடியே!கனதனக் குன்றும் ஐம்பால்காடும் சுமக்கும் கரும்பே!சகல கலாவல்லியே! 2
அளிக்கும் செந்தமிழ்த் தெள்ளமுதுஆர்ந்து, உன் அருள் கடலில்குளிக்கும் படிக்கு என்று கூடும் கொலோ?உளம் கொண்டு தெள்ளித்தெளிக்கும் பனுவல் புலவோர்கவிமழை சிந்தக் கண்டு,களிக்கும் கலாப மயிலே!சகல கலாவல்லியே! 3
தூக்கும் பனுவல் துறைதோய்ந்தகல்வியும், சொல்சுவை தோய்வாக்கும், பெருகப் பணித்து அருள்வாய்;வட நூற்கடலும்,தேக்கும், செந்தமிழ்ச் செல்வமும்,தொண்டர் செந்நாவில் நின்றுகாக்கும் கருணைக் கடலே!சகல கலாவல்லியே! 4
பஞ்சு அப்பி இதம்தரு செய்யபொன்பாத பங்கேருகம் என்நெஞ்சத் தடத்து அலராதது என்னே?நெடுந்தாள் கமலத்துஅஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவும், அகமும் வெள்ளைக்கஞ்சத் தவிசு! ஒத்து இருந்தாய்;சகல கலாவல்லியே! 5
பண்ணும், பரதமும், கல்வியும்தீஞ்சொல் பனுவலும், யான்எண்ணும் பொழுதுஎளிது எய்த நல்காய்;எழுதா மறையும்,விண்ணும், புவியும், புனலும்,கனலும், வெங்காலும் அன்பர்கண்ணும் கருத்தும் நிறைந்தாய்;சகல கலாவல்லியே! 6
பாட்டும், பொருளும், பொருளால்பொருந்தும் பயனும், என்பால்கூட்டும் படிநின் கடைக்கண் நல்காய்;உளம் கொண்டு தொண்டர்தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால்அமுதம் தெளிக்கும் வண்ணம்காட்டும்வெள் ஓதிமப் பேடேசகல கலாவல்லியே! 7
சொல்விற்பனமும், அவதானமும்,கவி சொல்லவல்லநல்வித்தையும், தந்து அடிமைகொள்வாய்,நளின ஆசனம்சேர்செல்விக்கு அரிது என்று ஒருகாலமும்சிதையாமை நல்கும்கல்விப் பெருஞ்செல்வப் பேறே!சகல கலாவல்லியே! 8
சொற்கும் பொருட்கும் உயிராமெய்ஞ்ஞானத்தின் தோற்றம் என்னநிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்?நிலம் தோய் புழைக்கைநற்குஞ் சரத்தின் பிடியோடுஅரச அன்னம் நாண, நடைகற்கும் பதாம்புயத் தாயே!சகல கலாவல்லியே! 9
மண்கண்ட வெண்குடைக் கீழாகமேற்பட்ட மன்னரும் என்பண்கண்ட அளவில் பணியச்செய்வாய்;படைப்போன் முதலாம்விண்கண்ட தெய்வம்பல் கோடி உண்டேனும்விளம்பில் உன்போல்கண்கண்ட தெய்வம் உளதோ?சகல கலாவல்லியே! 10