அபிராமி அந்தாதி
காப்பு
தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லைஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்றசீர்அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளேகாரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே.
உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலைதுதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயமென்னவிதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே. 1
துணையும் தொழுந்தெய்வமும், பெற்ற தாயும் சுருதிகளின்பணையும், கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங்கணையும், கருப்புச்சிலையுமென் பாசாங்குசமும், கையில்அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே. 2
அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டுசெறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப்பிறிந்தேன் நின்அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால்மறிந்தே விழும் நரகுக்குறவாய மனிதரையே. 3
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னிகுனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றை வார்சடைமேல்பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்தபுனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே. 4
பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால்வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல்திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே. 5
சென்னியது உன்பொன் திருவடித் தாமரை; சிந்தையுள்ளேமன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே!முன்னிய நின் அடியாருடன் கூடி முறைமுறையேபன்னியது என்றும் உன்தன் பரமாகம பத்ததியே. 6
ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்கதியுறு வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே. 7
சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரையெல்லாம்வந்தரி; சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்அந்தரி; நீலி; அழியாத கன்னிகை; ஆரணத்தோன்கந்தரி; கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே. 8
கருத்தன, எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பிற்பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்முருத்தன மூரலும், நீயும், அம்மே! வந்துஎன் முன்நிற்கவே. 9
நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பதுஉன்னை;என்றும் வணங்குவது உன்மலர்த் தாள்; எழுதாமறையின்ஒன்றும் அரும்பொருளே! அருளே! உமையே இமயத்துஅன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே! 10
ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,வானந்த மான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்தானந்தமான சரணார விந்தம் தவளநிறக்கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே. 11
கண்ணியது உன்புகழ் கற்பது உன்; நாமம் கசிந்து பத்திபண்ணியது உன் இருபாதாம் புயத்தில்; பகல் இரவாநண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான் முன்செய்தபுண்ணியம் ஏதுஎன் அம்மே புவி ஏழையும் பூத்தவளே. 12
பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்காத்தவளே பின் கரந்தவளே! கறைக் கண்டனுக்குமூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே! 13
வந்திப்பவர் உன்னை வானவர், தானவர், ஆனவர்கள்;சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே;பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச்சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே. 14
தண்ணளிக் கென்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம்விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?பண்ணளிக்கும் சொற் பரிமள யாமளைப் பைங்கிளியே. 15
கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து, கிளர்ந்தொளிரும்ஒளியே! ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லாவெளியே! வெளிமுதற் பூதங்களாகி விரிந்த அம்மே!அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே. 16
அதிசயமான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம்துதிசய ஆனன சுந்தரவல்லி, துணை இரதிபதிசயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம்மதிசயமாக வன்றோ வாமபாகத்தை வவ்வியதே. 17
வவ்விய பாகத்திறைவரும், நீயும் மகிழ்ந்திருக்கும்செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளேஅவ்வியம் தீர்த்தென்னை ஆண்ட பொற்பாதமும் ஆகிவந்துவெவ்விய காலன் என் மேல்வரும் போது வெளிநிற்கவே. 18
வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்தென் விழியும் நெஞ்சும்,களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை; கருத்தினுள்ளேதெளிநின்ற ஞானம் திகழ்கின்றதென்ன திருவுளமோ?ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே. 19
உறைகின்ற நின் திருக்கோயில்நின் கேள்வர் ஒருபக்கமோ?அறைகின்ற நான்மறையின் அடியோ? முடியோ? அமுதம்நிறைகின்ற வெண்திங்களோ? கஞ்சமோ? எந்தன் நெஞ்சகமோ?மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே. 20
மங்கலை! செங்கல சம்முலையாள்! மலையாள்! வருணச்சங்கலை செங்கைச்! சகல கலாமயில்! தாவுகங்கைபொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள்! உடையாள்!பிங்கலை! நீலி! செய்யாள்! வெளியாள்! பசும்பெண் கொடியே. 21
கொடியே! இளவஞ்சிக் கொம்பே எனக்குவம்பே பழுத்தபடியே! மறையின் பரிமளமே! பனிமால் இமயப்பிடியே! பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே!அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல் வந்துஆண்டு கொள்ளே. 22
கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது; அன்பர் கூட்டந் தன்னைவிள்ளேன்; பரசமயம் விரும்பேன்; வியன் மூவுலகுக்குஉள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்தகள்ளே! களிக்கும் களியே அளிய என் கண்மணியே. 23
மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்தஅணியே! அணியும் அணிக்கழகே! அணுகாதவர்க்குப்பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே. 24
பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்கமுன்னே தவங்கள் முயன்று கொண்டேன்; முதல் மூவருக்கும்அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே!என்னே! இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே. 25
ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்,காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்புசாத்தும் குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே. 26
உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்புபடைத்தனை; பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கேஅடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால்துடைத்தனை; சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே. 27
சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்அல்லும் பகலும் தொழும்அவர்க்கே அழியா அரசும்செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே. 28
சித்தியும், சித்தி தரும் தெய்வமும் ஆகித் திகழும் பராசத்தியும், சத்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்முத்தியும், முத்திக்கு வித்தும், வித்தாகி முளைத்தெழுந்தபுத்தியும், புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே. 29
அன்றே தடுத்து! என்னை ஆண்டுகொண்டாய்; கொண்டது அல்லவென்கைநன்றே உனக்கு இனிநான் என்செயினும், நடுக்கடலுள்சென்றே வீழினும் கரையேற்றுகை நின் திருவுளமே;ஒன்றே! பலஉருவே! அருவே! என் உமையவளே! 30
உமையும், உமையொரு பாகனும் ஏக உருவில் வந்துஇங்குஎமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்; இனி எண்ணுதற்குச்சமயங்களும் இல்லை; ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை;அமையும் அமையுறு தோளியர் மேல்வைத்த ஆசையுமே. 31
ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்பாசத்தில் அல்லலற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்வாசக்கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டுகொண்டநேசத்தை என் சொல்லுவேன்? ஈசர்பாகத்து நேரிழையே! 32
இழைக்கும் வினைவழியே அடும் காலன் எனைநடுங்கஅழைக்கும் பொழுதுவந்து அஞ்சல் என்பாய்; அத்தர் சித்தமெல்லாம்குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே!உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே. 33
வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம்தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்பைந்தேன் அலங்கற் பருமணி ஆகமும் பாகமும் பொன்செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே. 34
திங்கட் பகவின் மணம்நாறும் சீறடி சென்னிவைக்கஎங்கட்கு ஒருதவம் எய்தியவா! எண்ணிறந்த விண்ணோர்தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? தரங்கக் கடலுள்வெங்கட் பணியணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே. 35
பொருளே! பொருள் முடிக்கும் போகமே! அரும்போகம் செய்யும்மருளே! மருளில் வரும்தெருளே என் மனத்து வஞ்சத்துஇருளேதும் இன்றி ஒளிவெளியாகி இருக்கும் உன்றன்அருளேது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே! 36
கைக்கே அணிவது கன்னலும் பூவும்; கமலம் அன்னமெய்க்கே அணிவது வெண்முத்து மாலை; விடஅரவின்பைக்கே அணிவது பண்மணிக் கோவையும் பட்டும், எட்டுத்திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே! 37
பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே. 38
ஆளுகைக்கு உன்தன் அடித்தாமரைகள் உண்டு; அந்தகன்பால்மீளுகைக்கு உன்தன் விழியின் கடையுண்டு; மேல் இவற்றின்மூளுகைக்கு என்குறை; நின்குறையே அன்று; முப்புரங்கள்மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்நுதலே! 39
வாணுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதைநெஞ்சில்காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்புபூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே. 40
புண்ணியம் செய்தனமே மனமே! புதுப்பூங்குவளைக்கண்ணியும், செய்ய கணவரும் கூடிநம் காரணத்தால்நண்ணி இங்கேவந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்பண்ணி நம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே. 41
இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்துவடங்கொண்ட கொங்கை மலைகொண்டு, இறைவர் வலிய நெஞ்சைநடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப் பரிபுரையே. 42
பரிபுரச் சீறடிப்! பாசாங்குசை! பஞ்சபாணி! இன்சொல்திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமைநெஞ்சில்புரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கைஎரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே. 43
தவளே! இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலமாம்அவளே, அவர்தமக்கு அன்னையும் ஆயினள்; ஆகையினால்இவளே, கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்துவளேன், இனியொரு தெய்வமுண்டாக மெய்த்தொண்டு செய்தே. 44
தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது, துணிந்திச்சையேபண்டு செய்தார் உளரோ? இலரோ? அப்பரிசு அடியேன்கண்டு செய்தால் அது கைதவமோ? அன்றிச் செய்தவமோ?மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே; பின் வெறுக்கை அன்றே. 45
வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம்மடியாரை மிக்கோர்பொறுக்கும் தகைமை புதியதன்றே; புதுநஞ்சை உண்டுகறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே!மறுக்கும் தகைமைகள் செய்யினும், யான் உன்னை வாழ்த்துவேனே! 46
வாழும்படியொன்று கண்டு கொண்டேன்; மனத்தே ஒருவர்வீழும்படியன்று, விள்ளும்படியன்று, வேலைநிலம்ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவுபகல்சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே. 47
சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்இடரும் தவிர்த்து இமைப்போதிருப்பார் பின்னும் எய்துவரோ;குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே. 48
குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கிட்டவரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்துஅரம்பையடுத்த அரிவையர் சூழவந்து அஞ்சல் என்பாய்;நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகியே. 49
நாயகி; நான்முகி; நாராயணி; கை நளின பஞ்சசாயகி; சாம்பவி; சங்கரி; சாமளை; சாதிநச்சுவாயகி; மாலினி; வாராகி; சூலினி; மாதங்கி என்றுஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே. 50
அரணம் பொருள் என்று அருள் ஒன்றிலாத அசுரர்தங்கள்முரண்அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமேசரணம் சரணம் எனநின்ற நாயகிதன் அடியார்மரணம், பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே. 51
வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகைபெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறைமுடித்தஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு, அன்புமுன்புசெய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே. 52
சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்,பென்னம் பெரிய முலையும், முத்தாரமும் பிச்சிமொய்த்தகன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத்தன்னந்தனி இருப்பார்க்கிது போலும் தவமில்லையே. 53
இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால்சென்று இழிவுபட்டுநில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம்கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே. 54
மின்னாயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்றதுஅன்னாள்; அகமகிழ் ஆனந்தவல்லி; அருமறைக்குமுன்னாய் நடுவெங்குமாய் முடிவாய முதல்வி தன்னைஉன்னாது ஒழியினும், உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே. 55
ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகெங்குமாய்நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளேபொன்றாது நின்று புரிகின்றவா; இப்பொருள் அறிவார்அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என்ஐயனுமே. 56
ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம்உய்ய அறம்செயும் உன்னையும் போற்றி ஒருவர்தம்பால்செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்றுபொய்யும்மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்றன் மெய்யருளே. 57
அருணாம் புயத்தும் என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும்தருணாம் புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர்நயனக்கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும்,சரணாம் புயமும் அல்லால் கண்டிலேன் ஒருதஞ்சமுமே. 58
தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல தென்றுன் தவநெறிக்கேநெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை; நீள் சிலையும்அஞ்சம்பும் இக்குஅலராக நின்றாய்; அறியார் எனினும்பஞ்சுஅஞ்சு மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே. 59
பாலினும் சொல்இனியாய்! பனி மாமலர்ப்பாதம் வைக்கமாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார்சடையின்மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும்மெய்ப் பீடம் ஒருநாலினும் சாலநன்றோ அடியேன் முடை நாய்த்தலையே? 60
நாயேனையும் இங்கொரு பொருளாக நயந்துவந்துநீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன பேறுபெற்றேன்?தாயே! மலைமகளே! செங்கண்மால் திருத்தங்கச்சியே. 61
தங்கச்சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து, மதவெங்கண் கரியுரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி! கோகனகச்செங்கைக் கரும்பும், மலரும் எப்போதும் என் சிந்தையதே. 62
தேறும்படி சில ஏதுவும் காட்டிமுன் செல்கதிக்குக்கூறும் பொருள் குன்றில்கொட்டும் தறி குறிக்கும்; சமயம்ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்வேறும் சமயம் உண்டென்று கொண்டாடிய வீணருக்கே. 63
வீணே பலிகவர் தெய்வங்கள் பால்சென்று மிக்க அன்புபூணேன்; உனக்கு அன்பு பூண்டு கொண்டேன்; நின்புகழ்ச்சியன்றிப்பேணேன்; ஒருபொழுதும் திருமேனி பிரகாசமின்றிக்காணேன் இருநிலமும் திசை நான்கும் ககனமுமே. 64
ககனமும், வானமும், புவனமும் காணவிற் காமன் அங்கம்தகனம்முன் செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்முகனும் முந்நான்கிருமூன்றெனத் தோன்றிய மூதறிவின்மகனும் உண்டாயதன்றோ? வல்லி நீசெய்த வல்லபமே! 65
வல்லபம் ஒன்றறியேன்; சிறியேன் நின் மலரடிச்செம்பல்லவம் அல்லது பற்றொன்றிலேன் பசும் பொற்பொருப்புவில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய்; வினையேன் தொடுத்தசொல் அவமாயினும் நின்திருநாமங்கள் தோத்திரமே. 66
தோத்திரம் செய்து, தொழுது, மின்போலும் நின் தோற்றம்ஒருமாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மை, குலம்கோத்திரம், கல்வி, குணம்குன்றி நாளும் குடில்கள்தொறும்பாத்திரம் கொண்டு பலிக்குழலா நிற்பர் பாரெங்குமே. 67
பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர்விசும்பும்,ஊரும் முருகு சுவையொளி ஊறு ஒலி ஒன்றுபடச்சேரும் தலைவி, சிவகாமசுந்தரி சீரடிக்கேசாரும் தவமுடையார் படையாத தனமில்லையே. 68
தனம்தரும்; கல்விதரும்; ஒருநாளும் தளர்வறியாமனம்தரும்; தெய்வ வடிவுந் தரும்; நெஞ்சில் வஞ்சமில்லாஇனம் தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கேகனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே. 69
கண்களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம் பாடவியில்பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர்குலப்பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே. 70
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி; அருமறைகள்பழகிச் சிவந்த பதாம் புயத்தாள்; பனி மாமதியின்குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்கஇழவுற்று நின்றுநெஞ்சே இரங்கேல் உனக்கென் குறையே! 71
என்குறை தீரநின்று ஏத்துகின்றேன்; இனி யான் பிறக்கின்நின்குறையே அன்றி யார்குறை காண்; இரு நீள்விசும்பின்மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்?தன்குறை தீர எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே. 72
தாமம் கடம்பு; படைபஞ்சபாணம்; தனுக்கரும்பு;யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது; எமக்கென்று வைத்தசேமம் திருவடி; செங்கைகள் நான்கு; ஒளி செம்மையம்மைநாமம் திரிபுரை; ஒன்றோடு இரண்டு நயனங்களே. 73
நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்அயனும் பரவும் அபிராமவல்லி அடியிணையப்பயன்என்று கொண்டவர் பாவையர் ஆடவும், பாடவும் பொன்சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே. 74
தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில்; தாயரின்றிமங்குவர், மண்ணில் வழுவாப் பிறவியை; மால்வரையும்பொங்குவர் ஆழியும்! ஈரேழ்புவனமும் பூத்த உந்திக்கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே. 75
குறித்தேன் மனத்தில் நின்கோலம் எல்லாம்; நின் குறிப்பறிந்துமறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி; வண்டுகிண்டிவெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப்பிரான் ஒருகூற்றை மெய்யில்பறித்தே குடிபுகுதும் பஞ்சபாண பயிரவியே. 76
பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சர்உயிரவி உண்ணும் உயர்சண்டி, காளி ஒளிரும்கலாவயிரவி, மண்டலி, மாலினி, சூலி வராகியென்றேசெயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே. 77
செப்பும், கனக கலசமும் போலும் திருமுலைமேல்அப்பும் களப அபிராம வல்லி! அணிதரளக்கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணைவிழிக்கே. 78
விழிக்கே அருளுண்டு; அபிராம வல்லிக்கு வேதம்சொன்னவழிக்கே வழிபட நெஞ்சுண்டு; எமக்கு அவ்வழி கிடக்கப்பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே. 79
கூட்டியவா! என்னைத் தன் னடியாரில் கொடியவினைஓட்டியவா! எண்கண் ஒடியவா! தன்னை உள்ளவண்ணம்காட்டியவா! கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா!ஆட்டியவா நடம் ஆடகத்தாமரை ஆரணங்கே. 80
அணங்கே! அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்வணங்கேன்; ஒருவரை வாழ்த்துகிலேன்; நெஞ்சில் வஞ்சகரோடுஇணங்கேன் எனதுஉனது என்று இருப்பார் சிலர் யாவரொடும்பிணங்கேன்; அறிவொன்றிலேன் எண்கண் நீவைத்த பேரளியே. 81
அளியார் கமலத்தில் ஆரணங்கே! அகிலாண்டமும் நின்ஒளியாக நின்ற ஒளிர்திரு மேனியை உள்ளுதொறும்களியாகி, அந்தக் கரணங்கள் விம்மிக், கரைபுரண்டு,வெளியாய்விடின், எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே. 82
விரவும் புதுமலர் இட்டு நின் பாத விரைக்கமலம்இரவும் பகலும் இறைஞ்சவல்லார், இமையோர் எவரும்பரவும் பதமும், அயிராவதமும், பகீரதியும்உரவும் குலிசமும், கற்பகக் காவும் உடையவரே. 83
உடையாளை, ஒல்கு செம்பட்டு உடையாளை; ஒளிர்மதிச்செஞ்சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளைத், தயங்கும் நுண்ணூல்இடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப்படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே. 84
பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச்சிறைவண்டுஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும் என் அல்லல்எல்லாம்தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்,வார்க்குங்கும முலையும், முலைமேல் முத்துமாலையுமே. 85
மாலயன் தேட, மறைதேட, வானவர் தேட, நின்றகாலையும், சூடகக் கையையும், கொண்டு, கதித்தகப்புவேலை வெங்காலன் என்மேல் விடும்போது வெளிநில்கண்டாய்;பாலையும் தேனையும், பாகையும் போலும் பணிமொழியே. 86
மொழிக்கும், நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி என்றன்விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்! விழியால் மதனைஅழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டமெல்லாம்பழிக்கும் படியொரு பாகம் கொண்டாளும் பராபரையே. 87
பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும்; உன்பத்தருக்குள்தரமன்று இவன்என்று தள்ளத்தகாது; தரியலர்தம்புரம்அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில் அயன்சிரம் ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே! 88
சிறக்கும் கமலத் திருவே! நின்சேவடி சென்னிவைக்கத்துறக்கம் தரும், நின் துணைவரும் நீயும் துரியம் அற்றஉறக்கம் தரவந்து உடம்போடு உயிர்உற வற்றறிவுமறக்கும் பொழுதென் முன்னே வரல்வேண்டும் வருந்தியுமே. 89
வருந்தா வகைஎன்மனத் தாமரையினில் வந்துபுகுந்துஇருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப்பொருந்தாது ஒருபொருள் இல்லை; விண்மேவும் புலவருக்குவிருந்தாக, வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே. 90
மெல்லிய நுண்ணிடை மின் அனையாளை, விரிசடையோன்புல்லிய மென்முலை பொன் அனையாளைப் புகழ்ந்து மறைசொல்லிய வண்ணம் தொழுமடி யாரைத் தொழுமவர்க்குப்பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம்தருமே. 91
பதத்தே உருகி, நின்பாதத்திலே மனம்பற்றி, உன்றன்இதத்தே ஒழுக அடிமைகொண்டாய்; இனியான் ஒருவர்மதத்தே மதிமயங்கேன்; அவர் போன வழியும் செல்லேன்;முதல்தேவர் மூவரும், யாவரும் போற்றும் முகிழ்நகையே. 92
நகையே இஃதிந்த ஞாலம் எல்லாம்பெற்ற நாயகிக்குமுகையே முகிழ்முலை; மானே முதுகண்; முடிவில் அந்தவகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது; நாம்மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே. 93
விரும்பித் தொழும் அடியார், விழிநீர்மல்கி மெய்புளகம்அரும்பித், ததும்பிய ஆனந்தமாகி; அறிவிழந்து,சுரும்பிற் களித்து மொழி தடுமாறி, முன் சொன்னஎல்லாம்தரும்பித்தர் ஆவரென்றால், அபிராமி சமயம்நன்றே. 94
நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவதுஒன்றேயும் இல்லை; உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம்அன்றே உனதென்று அளித்து விட்டேன்; அழியாத குணக்குன்றே! அருட்கடலே! இமவான் பெற்ற கோமளமே! 95
கோமள வல்லியை அல்லியந் தாமரைக்கோயில் வைகும்யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரியசாமள மேனிச் சகலகலா மயில் தன்னைத் தம்மால்ஆமளவும் தொழுவார் எழுபாருக்கும் ஆதிபரே. 96
ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன்போதிற் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி,காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே. 97
தைவந்து நின் அடித்தாமரை சூடிய சங்கரற்குக்கைவந்த தீயும், தலைவந்த ஆறும் கரந்ததெங்கே?மெய்வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர்தங்கள்பொய்வந்த நெஞ்சில் புகலறியா மடப் பூங்குயிலே. 98
குயிலாய் இருக்கும் கடம்பாட வியிடை; கோலவியன்மயிலாய் இருக்கும் இமயாசலத் திடை; வந்துதித்தவெயிலாய் இருக்கும் விசும்பில்; கமலத்தின் மீதன்னமாம்கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே. 99
குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லிகழையைப் பொருத திருநெடுந் தோளும், கரும்புவில்லும்விழையப் பொருதிறல் வேரியம் பாணமும்; வெண்ணகையும்,உழையைப் பொருக்கண்ணும், நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே. 100
நூற்பயன்
ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டமெல்லாம்பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவிஅடங்கக்காத்தாளை அங்குச பாசாங் குசமும் கரும்பும்அங்கைசேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே! 101